Money obsessive offer customers the company plea to lock the chitfund company

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இந்தியாவின் பல மாநிலங்களில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தின் கிளை பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தில இயங்கி வருகிறது.

அங்கு தினசரி வாடிக்கையாளர்களிடம் சென்று ஒரு குறிப்பிட்ட அளவு நிதியை வசூலித்து வந்துள்ளனர். 20 மாதத்திற்கு பிறகு முதிர்ச்சி அடைந்த தொகையை, 15 – 40 நாட்களுக்குள் வழங்கி வந்துள்ளனர்.

இந்நிலையில், பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரிடம் வசூலிக்கப்ட்ட சீட்டுத் தொகையை முதிர்வு நாள் 60 நாட்கள் முடிவுற்றும் சுமார் 3 லட்ச சீட்டிற்கான தொகையை வழங்க அலைக்கழித்துள்ளனர்.

ஆனால், ரமேஷ்குமார், பலமுறை நிறுவன மேலாளார் அருண்குமாரிடம் சென்று கட்டிய பணத்தை கேட்டுள்ளார். அவர் வழங்குவதாக தெரிவித்த தேதியில் தொடர்ந்து சென்றும் கேட்டுள்ளார். ஆனால், நிதிநிறுவனத்தின் அலட்சிய போக்கை கண்டித்து இன்றும் அந்நிறுவனத்தில் பணம் கட்டிய வாடிக்கையாளர்கள் சிலர் ரமேஷ்குமாருடன் சென்று காலை முதலே பணம் வழங்க கேட்டனர்.

தொடர்ந்து நிதி நிறுவனத்தினர் கட்டிய பணத்தை வழங்காமல் அலட்சியம் காட்யடிதால் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் இன்று நிதி மேலாளர் உள்ளிட்ட சிலா ஊழியர்களை உள்ளே வைத்து கதவை மூடி பூட்டு போட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் உதவி ஆய்வாளர்கள் பெரியசாமி, ரமேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பூட்டி இருந்த கதவை வாடிக்கையாளர்களை திறக்க சொல்லி உள்ளே இருந்த ஊழியார்களை மீட்டனர். பின்னர், அவர்களிடம் நடந்த சம்பவம் விசாரணை நடத்தினர்.

வரும் சனிக்கிழமை மற்றும் குறிப்பிட்ட தினங்களில் நிதிநிறுவனத்தின் மேலாளார் தெரிவித்த வாக்குறுதியின் அடிப்படையில் இருதரப்பினரையும் சமசரம் செய்து வைத்தனர்.

பின்னர், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மேலும் நிதிநிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தொகை வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!