போலி விசா கொடுத்து 100க்கும் மேற்பட்ட பட்டதாரிகளிடம் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் இன்று பெரம்பலூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்
பெரம்பலூர் மாவட்டம் நக்கசேலம் கிராமத்தை சேர்ந்தவர் ஆரிப்(40), இவர் கடந்த சில வருடங்களாக பெரம்பலூர் அருகே பாடாலூரில் வசித்து வந்தார்.
இந்நிலையில் ஆரிப் திருச்சி, தஞ்சை, கோவை, நெல்லை, மதுரை கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்ப்பட்ட பட்டதாரி வாலிபர்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதாக கூறி தலா 30 ஆயிரம் முதல் 1.50 லட்சம் வரை ஒரு கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு விசாக்கள் கொடுத்துள்ளார்.
விசா பெற்ற பட்டதாரிகள் மும்பை ஏர்போர்ட் வழியாக வெளிநாடு செல்ல முயன்ற போது ஆரிப் கொடுத்த விசாக்கள் அனைத்தும் போலியானது என தெரிய வந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த பட்டதாரி வாலிபர்கள் ஆரிப்பை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்து முடியாமல் போனதால் பாடாலூருக்கு நேரில் சென்று பார்த்த போது ஆரிப் தலைமறைவாகியது தெரிய வந்ததுள்ளது.
இதனைத் தொடர்ந்து மோசடி செய்த ஆரிப்பை கண்டுபிடித்து பணத்தை பெற்றுத்தர வேண்டுமென வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் இன்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரிம் இன்று மனு அளித்தனர்.
மனுவை பெற்று கொண்ட கலெக்டர் அதனை காவல் துறைக்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.