mosquito alleviate the need for full cooperation of the people – in Perambalur municipal
பெரம்பலூர் நகராட்சியில் இருந்து விடுக்கப்ட்டுள்ள அறிவிப்பு :
பெரம்பலூர் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு சிறப்பு பணி மாவட்ட பொதுசுகாதார துறை மற்றும் பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் சிறப்பு பணியாளர்களை கொண்டு 21 வார்டுகளிலும் கொசுப்புழு ஒழிப்புபணி மற்றும் முதிர்கொசு ஒழிப்பு பணி, புகை மருந்து அடிக்கும் பணி நடைபெற்றுவருகிறது. மேற்படி கொசுஒழிப்பு பணிக்காக தங்கள் வீடு தேடிவரும் களப்பணியாளர்களுக்கு பணிமேற்பார்வை கொள்வதற்கு பொதுமக்கள் முழுஒத்துழைப்பு நல்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தங்களது குடியிருப்பு பகுதியில் தொடர்ந்து ஏழு தினங்களுக்குமேல் வீடுபூட்டியிருந்தால்; கொசுப்புழு உற்பத்தியாவதற்கும் இதனால் நோய் பரவுவதற்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. எனவே, இது போன்று பூட்டியிருக்கும் வீடுகள் இருந்தால் உடனடியாக நகராட்சி அலுவலகத்திற்கு 9047362333, 9442662494, 9150261461 ஆகிய தொலைபேசி எண்கள் மூலம் தகவல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பொது மக்கள் தங்களது வீட்டில் குடிநீரினை பாதுகாப்பாக மூடிவைத்து பயன்படுத்தவும் மற்றும் வீட்டின் அருகில் தண்ணீர் தேங்காத வண்ணம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பரிசோதனை மற்றும் மேற்கொள்ள வேண்டும்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் பொதுசுகாதார துறை மூலம் தினசரி வழங்கப்படும் நிலவேம்பு குடிநீரை அனைவரும் பருகிட வேண்டும். நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் குடியிருப்பு மனைகளாக பிரிக்கப்பட்டு வீடுகள் கட்டப்படாமல் காலிமனைகளில் உள்ள செடி, கொடி மற்றும் முட்புதர்களை தாங்களாகவே முன்வந்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
தவறும்பட்சத்தில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் சுத்தம் செய்து அதற்கான கட்டணத் தொகை அபாரதத்துடன் வசூலிக்கப்படுவதுடன் அம்மனைகளில் வீடுகட்டுவதற்கு கட்டிட அனுமதி, குடிநீர் இணைப்பு மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படமாட்டாது எனவும் இறுதியாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், குடியிருப்புதாரர்கள் தாங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை அருகில் உள்ள காலிமனைகளில் கொட்டவேண்டாம். தங்களைச் சுற்றியுள்ள சுற்றுபுறத்தை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும், என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.