பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், இரூர் கிராமத்தில் நல்லேறு பூட்டும் திருவிழா இன்று நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நல்லேறு பூட்டி சாகுபடிப் பணிகள் துவங்குவது வழக்கம்.
இந்த வழக்கம் பல கிராமங்களில் தற்போது மறைந்து விட்டாலும், ஒரு சில கிராமங்களில் இன்னும் தொடர்கின்றன.
இரூர் கிராமத்தில் தொன்று தொட்டு நடத்தப்பட்டு வரும் நல்லேறு பூட்டும் விழா இன்று காலையில் நடைபெற்றது.
இவ்விழாவிற்காக மாடுகளுக்குச் சந்தனப் பொட்டு வைத்து, விளை நிலத்தில் கணபதி பூஜை, வருண பூஜை, சூரிய நாராயண பூஜை, பூமி பூஜை ஆகியவை நடத்தது.
பின்னர், காளை மாடுகளுக்கு மாலை அணிவித்து வயலில் அணிவகுத்து நிறுத்தி சூரியனுக்கும், பூமிக்கும் நன்றி செலுத்தும் வகையில் வெல்லம் கலந்த காப்பு அரிசியை கால்நடைகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து, கலப்பையில் கால்நடைகளை பூட்டி விவசாய நிலத்தில் உழவு செய்யப்பட்டது. இதன்மூலம், இந்த ஆணடில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும், உழவர்களின் வாழ்வாதாரம் உயரும் என நம்பிக்கை தெரிவித்தனர்.