Namakkal district, minority students receive scholarship deadline extension
சிறுபாண்மையின மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை அனுப்ப காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
2018-19 ஆம் ஆணடிற்கான பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி, வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பெற செப்டம்பர் 30 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தற்போது பள்ளிபடிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தில் சிறுபான்மையின மாணவ, மாணவியர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வரும் அக். 15ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மற்ற கல்வி உதவித் தொகை திட்டங்களான பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு வரும் அக்டோபர் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இக்காலக்கெடு கல்வி நிலையங்களுக்கும் பொருந்தும். எனவே நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையினத்தைச் சார்ந்த தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவியரும் ஆன்லைன் மூலமாக கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்து பயனடையலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.