Namakkal Municipal health services Inspection in the area: Collector Asiamariyam review
நாமக்கல் நகராட்சி பகுதியில் சுகாதாரப்பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் நகராட்சிக்குட்பட்ட எம்ஜிஆர் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம்நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின் போது தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டுள்ள பாத்திரங்களில் கொசுப்புழுக்கள் ஏதேனும் இருக்கின்றனவா, முறையாக மூடி பயன்படுத்தப்படுகின்றனவா, குப்பைகள் அகற்றப்பட்டு இருக்கின்றதா என்றும் ஆய்வு செய்தார்.
மழைக்காலங்களில் மழை நீரானது வீடுகளின் மேற்பகுதிகளிலும், தேங்காய் சிரட்டை, அம்மிக்கல், தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்குவதாலும், வீடுகளில் குடிதண்ணீரை சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்காமல் இருப்பதாலும் டெங்கு கொசுக்கள் நன்னீரீல் முட்டையிட்டு உற்பத்தியாகின்றன.
மேலும் டெங்கு கொசுக்களை உருவாக்கும் ஏடிஸ் கொசுக்களால் ஏற்படும் பாதிப்பு, உருவாகமல் தடுக்கும் முறைகள் குறித்து குடியிருப்புகளில் உள்ள பெண்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த ஆய்வுகளின்போது நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.