Namakkal – Sellappampatti Maha Mariyamman Temple is the 7th anniversary of Navratri festival
நாமக்கல் அடுத்துள்ள செல்லப்பம்பட்டியில் சுயம்பு மகாமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டு தோறும் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தாண்டு நவராத்திரி விழா நேற்று துவங்கியது. நேற்று சுவாமிக்கு காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் அலங்காரம் நடைபெற்றது. இன்று புதுக்கோட்டை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் அலங்காரமும், நாளை 12ம் தேதி ஸ்ரீ வராகி அம்மன் அலங்காரமும், சனிக்கிழமை திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்மன் அலங்காரமும் நடைபெறுகிறது.
14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ நாமகிரித்தாயார் அலங்காரமும், திங்கள் கிழமை சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் அலங்காரமும், 16ம் தேதி செவ்வாய்கிழமை சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளியம்மன் அலங்காரமும், 17ம் தேதி புதன் கிழமை சீவலப்பேரி ஸ்ரீ துர்கையம்மன் அலங்காரமும், 18ம் தேதி வியாழக்கிழமை கூத்தனூர் ஸ்ரீ சரஸ்வதி அம்மன் அலங்காரமும் நடைபெறுகிறது.
நவராத்திரி நாட்களில் ஆன்மீக சொற்பொழிவுகள், பரதநாட்டியம், பக்தி பாடல்கள், பஜனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். 18ம் தேதி வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு ஸ்ரீ துர்கா லட்சுமி ஹோமம் நடைபெறுகிறது.
நவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர்பொதுமக்கள் மற்றும் ஸ்ரீ மகாமாரியம்மன் வார வழிபாட்டு மன்றத்தினர் செய்துவருகின்றனர்.