National Consumer Day and World Consumer Rights Day; Perambalur Collector Call!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சி எதிர்வரும் 17.03.2022 அன்று காலை 11.00 மணியளவில் பெரம்பலூர் கலெக்டர் ஆபீஸ் கூட்டரங்கில் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே, பள்ளி மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்;ச்சிகள் நடத்தப்பட்டு சிறந்த படைப்புகளை உருவாக்கிய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
விழாவின் போது மாவட்ட ஆட்சித் தலைவரால், சிறந்த படைப்புகளுக்கு பாராட்டு சான்றுகள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இக்கூட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களில் அங்கம் வகிக்கும் மாணவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும்; நுகர்வோர் தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள் தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கவுள்ளனர். நுகர்வோர் அமைப்புகளில் ஈடுபாடு உள்ளோர் இவ்விழாவில் கலந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.