National Consumer Protection Day and World Consumer Rights Day ceremony took place at Perambalur.
பெரம்பலூர் : தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நுகர்வோர் பாதுகாப்பிற்கான உரிமை, தகவல் பெறும் உரிமை, நுகர்வோர் கல்விக்கான உரிமைகள் மற்றும் அடிப்படை தேவைகளுக்கான நுகர்வோர்களின் உரிமைகள் குறித்து நுகர்வோர் பாதுகாப்புச் சங்க பிரதிநிதிகளால் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இதில், மாவட்ட அளவில் நுகர்வோர் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) சி.சேதுராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அ.மனோகரன், பெரம்பலூர் வருவாய் கோட்ட அலுவலர் ந.கதிரேகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் வெ.பெரியசாமி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மா.சவுமியாசுந்தரி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.