#National level Go-Go tournaments involving tamilnadu team training In Perambalur

co-co-game தேசிய அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டிகளில் பங்குபெறும் தமிழக அணியினருக்கு பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இந்தியப் பள்ளிகள் விளையாட்டுக்குழுமம் சார்பில் மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள திவாஷ் எனும் இடத்தில் வரும் டிசம்பர் 15-ம் தேதி தேசிய அளவிலான கோ-கோ விளையாட்டுப் போட்டிகளில் தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் 14 வயதிற்குட்பட்டோருக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் கலந்துகொள்ள உள்ளனர்.

இப்போட்டிகளில் கலந்துகொள்ள உள்ள அணியினரை தேர்வு செய்வதற்காக தமிழகத்தில் உள்ள 8 மண்டலங்களில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் மாநில அளவிலான தெரிவுப் போட்டிகள் நடத்தப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட கோ-கோ விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான பயிற்சி வகுப்புகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஜயன் இன்று (09.12.2016) மாவட்ட விளையாட்டரங்கில் துவக்கி வைத்தார். இன்று தொடங்கிய பயிற்சி வகுப்புகள் டிச 11ம் தேதி வரை நடைபெறுகிறது.

இப்பயிற்சி வகுப்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆண்கள் பிரிவில் 12 விளையாட்டு வீரர்களும், பெண்கள் பிரிவில் 12 விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயச்சந்திரன், சங்கர் மற்றும் சாந்தி உள்ளிட்டோர் பயிற்சி அளித்து வருகின்றனர்.

#perambalur

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!