National People’s Court (Lok Adalat) at Perambalur court complex on July 14.
பெரம்பலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம், தேசிய, தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவினரின் வழிகாட்டுதலின் பேரில் இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் வருகிற 14.07.2018 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற இருக்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள சமரசமாக தீர்க்கக்கூடிய வகையில் உள்ள வழக்குகள் பொருத்தும் வங்கி வழக்குகள் (வாராக் கடன்கள்) பொருத்தும் 14.07.2018 அன்று காலை 10.00- மணிக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ். பாலராஜமாணிக்கம் தலைமையிலும், ஓய்வு பெற்ற நீதிபதிகள் மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் முன்னிலையில் பெரம்பலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற இருப்பதால் வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள தங்களது வழக்குகளை சமாதானமாக முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.