National poll Quiz: Perambalur District Tournament: Tomorrow is happening: Collector
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :
இந்திய தேர்தல் ஆணையம் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட இளம் மாணவர்களான எதிர்கால வாக்காளர்கள் தேர்தல் தொடர்பான நடைமுறைகளை அறிந்துகொள்ளும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் தேசிய தேர்தல் வினாடி வினா போட்டிகளை நடத்திட ஆணையிட்டுள்ளதை தொடர்ந்து பள்ளிகள் அளவிலான வினாடி வினா போட்டிகள் அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்பட்டது.
தற்போது பள்ளி அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட அளவிலான மாவட்ட சுற்றுப் போட்டி நாளை பெரம்பலூர் நகரில் துறையூர் சாலையில் உள்ள பாரத சாரணர் – சாரணியர் அலுவலகத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. பள்ளி அளவிலான போட்டியில் வெற்றி பெற்றுள்ள 13 அணியினர் மாவட்ட சுற்றுப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய தேர்தல் வினாடி வினா நடத்திட அமைக்கப்பட்டுள்ள குழுவினரால் போட்டிகள் நடத்தப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.
மாவட்ட அளவிலான மாவட்ட சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணியினர் மாநில அளவில் நடைபெறும் தேர்தல் தேசிய வினாடி வினா போட்டிக்கு பரிந்துரைக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.