Natural childbirth near Perambalur: Birth problem, mother killed!

பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடியை சேர்ந்தவர் விஜயவர்மன் – அழகம்மாள். இருவருக்கும் கடந்த ஓர் ஆண்டு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், கடந்த ஏப்ரல் முதல் குழந்தைக்கு கருவுற்ற நிலையில், அரசு சுகாதார துறையினர் முறையாக பிரவசம் பார்க்க அழைத்துள்ளனர். ஆனால், விஜயவர்மன் அக்குபங்சர் படித்துள்ளதால் வீட்டிலேயே இயற்கை முறையில் பிரசவம் பார்த்து கொள்ளலாம் என தெரிவித்தன் பேரில், பி.எஸ்.சி. நர்சிங் படித்த அழகம்மாளும், அவரது பேச்சை ஏற்று மருத்துவமனைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சுகாதார துறையினரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதற்கு விஜயவர்மன் – அழகம்மாள் தம்பதியினர் எந்த அசம்பாவிதம், வேறு விபரீதங்கள் நடந்தாலும், சுகாதாரத்துறையினர் பொறுப்பு அல்ல என எழுதி கொடுத்துள்ளனர்.
நேற்றிரவு அழகம்மாளுக்கு கடும் வயிற்று வலி ஏற்படவே, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையில் குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்பட்டது. பின்னர் அவருக்கு ஏற்பட்ட உதிரபோக்கு காரணமாக மேல்சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். செல்லும் வழியிலேயே அழகம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், அரும்பாவூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரை குறை வைத்தியர்களை நம்பி உயிருடன் விளையாடக்கூடாது என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம்.









kaalaimalar2@gmail.com |
9003770497