Near in Perambalur unlawfully occupying private company stone quarry, restore the quarry workers petition
rtc-mines பெரம்பலூர் : கல் உடைக்கும் தொழிலாளார்கள் கோட்டாசியரிடம் கொடுத்துள்ள மனு விவரம்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூரில் 150 க்கும் மேற்பட்ட கல்உடைக்கும் தொழிலாளார்கள் (போயர்கள்) வசித்து வருகிறோம். வீடு கட்ட அரளை கற்கள், ஆடு, மாடு தொழுவத்திற்கு பயன்படுத்தப்டும் தொட்டிகள், குடல்கல், அம்மி குழவி, போன்ற பல்வேறு வகையான கற்களான கருவிகளை குலத் தொழிலாளகவும், வேலையற்ற பிற சமுதாயத்தினரும், எங்களுடன் இணைந்தும் கற்தொழில் செய்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக அரசு எங்களுக்கு தொழில் செய்வதற்காக சர்வே எண்: 219 / 1 என்ற இடத்தில் ஒதுக்கி கொடுத்தது. அதனை பயன்படுத்தி எங்கள் வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தி வந்தோம். தற்போது அரியலூரை சேர்ந்த ஆர்.டி.சி மைன்ஸ் என்ற தனியார் நிறுவனம் சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமிப்பு செய்து எங்களிடம் தகராறு செய்வதுடன் அடியாட்களை வைத்து மிரட்டி வருகின்றனர்.

இது குறித்து அரசு அதிகாரிகளிடம் மனு அளித்தாலும், உரிய நடவடிக்கை எடுப்பதில்லை, மேலும், அரசியல் கட்சியினர் தங்கள் கட்சிக்கு கணிசமான நன்கொடைகள் பெற்றுக் கொண்டதால் இப்பிரச்சனையில் கவனம் செலுத்துவதில்லை. எனவே , உண்மைக்கு புறம்பாக மோசடியாக லீசுக்கு எடுத்து விட்டதாக கூறிவரும் ஆர்.டி.சி மைன்ஸ் மீது உரிய நடவடிக்கை எடுத்து, மீண்டும் எங்கள் வாழ்வதாரம் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என அந்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ஆர்.டி.சி மைன்ஸ் எண் : 04329-222065 என்ற தொடர்பு கொண்ட போது உரிமையாளர் வெளியே சென்றுள்ளதாகவும், அவர் வந்த உடன் தகவல் தெரிவித்து உரிய பதிலளிக்கப்படும் என தெரிவித்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!