Near Perambalur, teen Girls, who went to Temple in Praying : Dispute between two parties! Police investigation !!
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள தெரணி கிராமத்தைச் சேர்ந்த மூன்று நேற்று மாலை, அவ்வூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராகுல் (26) வடிவேல் மகன் பெரியசாமி (21) பெரியசாமி மகன் பூயரசன் (25) சுரேஷ் மகன் கார்த்திக் (18) ஆகியோர்கள் குடிபோதையில் சாமி கும்பிட சென்ற 3 பெண்களை கேலி கிண்டல் செய்துள்ளனர் .
இச்சம்பவத்தை அப்பெண்கள் அவர்களது தெருவில் உள்ளவர்களிடம் சொன்னதால் , கிண்டல் செய்தவர்களின் தெருவிற்கு குடிபோதையில் தகராறு செய்து , கல் மற்றும் கட்டைகளால் தாக்குதல் நடத்தினர். இதில் ராஜேந்திரன் (45) வீட்டின் ஜன்னல் கண்ணாடியும் , 2 ) ரத்தினம் (25) மற்றும், கோபி (42) ஆகியோரின் ஆஸ்பெட்டாஸ் வீடுகளின் சீட்டையும் சேதப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பதிலடியாக சோலைமுத்து என்பவரின் ஒட்டு வீட்டின் ஓட்டை உடைத்து மற்றொரு குழுவினர் சேதப்படுத்தனர் .
இச்சம்பவத்தில் லேசான காயங்கள் ஏற்பட்டதால், பொம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
மேலும், பாடாலூர் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் சதீஷ்குமார் மீது கல் பட்டதில் இடது தாடையில் லேசான காயம் ஏற்பட்டது . வன்முறை சம்பவம் நிகழாமல் தடுக்க தெரணி கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஆயுதங்களுடன் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இது தொடர்பாக, இன்று காலை, சுமார் 13 க்கும் மேற்பட்டோரை, இரு தரப்பிலும், காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து பாடாலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் தீபாவளி நேற்று மாலைக்கு மேல் களையிழந்தது.