New Food Security Officers in Perambalur District Appointment: Collector V.Santha Information.
பெரம்பலூர் மாவட்டத்தில் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் வியாபார பெருமக்களுக்கும், பொதுமக்களுக்கும் இம்மாவட்டத்தில் புதிதாக பணியேற்று இருக்கும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல்.
சென்னை தமிழ்நாடு உணவுபாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் ஆணையரின் ஆணையின்படி ஒரே இடத்தில் ஐந்து வருடங்களுக்கு மேல் பணியாற்றிய உணவுபாதுகாப்பு அலுவலர்களை இடமாற்றம் செய்துள்ளார்கள். அதன்படி பெரம்பலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையில் பெரம்பலூர் நகராட்சி, ஆலத்தூர் மற்றும் வேப்பூர் வட்டாரங்களுக்கு புதிதாக உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
பெரம்பலூர் நகராட்சிக்கு ந.சின்னமுத்து என்பவருக்கு பதிலாக P.சீனிவாசன் (9442575044) என்பவர் உணவு பாதுகாப்பு அலுவலராகவும், ஆலத்தூர் வட்டாரத்திற்கு ந.ரவி என்பவருக்கு பதிலாக ஊ.கௌதமன் (9486519515) என்பவரும், வேப்பூர் வட்டாரத்திற்கு த.அழகுவேல் என்பவருக்கு பதிலாக சு.இளங்கோவன் (9791500553) என்பவரும் உணவு பாதுகாப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்புத்துறை பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கு இவர்களின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம்.
உணவுப்பொருட்களில் கலப்படம் பற்றிய புகார்களுக்கு 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம். மேலும் விபரங்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்தில் இரண்டாம் தளத்தில் இயங்கும் உணவுபாதுகாப்புத்துறை அலுவலகத்தை அணுகலாம் அல்லது 04328-224033 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு பயன்பெறலாம், என கேட்டுக் கொண்டுள்ளார்.