Newly Married woman hangs herself near Perambalur Police investigation
பெரம்பலூர் காமராஜர் வளைவுப்பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 27), கற்சிலை வடிவமைப்பாளராக உள்ளார். இவருக்கு டி.களத்தூரை சேர்ந்த கனகா (வயது 23) என்ற பெண்ணுடன் கடந்த 102 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.
நேற்று முன்தினம், வேலு அவரது மனைவி கனகாவின், சொந்த ஊரில் டி.களத்தூரில் விட்டு வந்துள்ளார். போனிலும் நேற்று காலை இருவரும் போனிலும் பேசி உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை 11.30 மணி அளவில், கனகா வீட்டில் தனியாக இருந்த போது தூக்குமாட்டி தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கனகாவின் உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும், புதுப்பெண் சாவிற்கு காரணம் என்ன என்பதை பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், இது தொடர்பாக ஆர்.டி.ஓ (சப் கலெக்டர்) -வும் விசாரணை நடத்தி வருகிறார். மர்மான முறையில் பெண் இறந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.