பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 71 சத்துணவு அமைப்பாளர் மற்றும் 122 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்திட 05.02.2016 முதல் 18.02.2016 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
அதற்கான நேர்முகத் தேர்வு 25.2.2016 காலை 8.00 மணிமுதல் நடைபெற்றது.
இந்த நேர்முகத் தேர்விற்கு வருகை தந்த பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்திலும்,
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற் உட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்திற்கு பின்புறமுள்ள கூட்டுறவுத்துறை இணைப்பதிவாளர் அலுவலகத்திலும்,
வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியரகத்திற்கு பின்புறமுள்ள் வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகத்திலும் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றது.
3,044 நபர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்டனர். இதில் அரசு விதிமுறைகளுக்குட்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 71 அமைப்பாளர்கள், 121 சமையல் உதவியாளர்கள் என மொத்தம் 192 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டு இன்று முதல் பணியில் சேர்ந்துள்ளனர். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.