North-East Monsoon Precautionary Action: Survey and Counsult with Voluntary Organizations
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தன்னார்வ அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடனான ஆய்வுக் கூட்டம் ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் பெரம்பலூர் மாவட்டத்திற்குட்பட்ட 4 வட்டங்களிலும், வெள்ள பாதிப்பு ஏற்படும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 47 பதட்டமான பகுதிகளில் வாழும் மக்களை இயற்கை இடர்பாடு ஏற்படும் காலத்தில் பாதுகாப்பான பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் தன்னார்வ அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுக்கள் மழை வௌ;ளக் காலங்களில் ஏற்படும், திடீர் காட்டாற்று வெள்ளங்கள் குறித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிப்பதற்கும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மழை வெள்ளக் காலங்களில் மக்களுக்கு தெரிவிக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்களுக்கு உடனடியாக தெரிவித்திடவும், பேரிடரால் பாதிக்கப்படும்போது மக்களுக்கு தேவையான உடனடி தேவைகளை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்திட ஏதுவாக அவர்களுக்கு தேவையான வழிமுறைகள் குறித்தும் நடைபெற்றது.
இக்கூட்டத்தில். அரசு பணியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.