Instead of catching the money of innocents, the Election Commission should catch the money of politicians, the resolution of the trade union meeting
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆ லோசனைக் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஏ.கே.வி.எஸ். சண்முகநாதன் தலைமையில் நடந்தது. இதில், மாநிலத் தலைவர் ஏ.ஏம்.விக்கிரமராஜா, மாநில பொதுச்செயலாளர் வெ.கோவிந்தராஜுலு, மாநில பொருளாளர் ஏ.எம். சதக்கத்துல்லா, மாநில தலைமைச் செயலாளர் ஆர்.ராஜ்குமார், மற்றும் நிர்வாகிகள், செய்தித் தொடர்பாளர் பி.பாண்டியராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட இணைச் செயலாளர் பி.ரவிசுந்தரம் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலாளர் சாமி.இளங்கோவன் வரவேற்றார்.
கூட்டத்தில் தேர்தல் ஆணையம், கருப்பு பணம் வைத்திருக்கும் அரசியல்வாதிகளை பிடிக்காமல், அப்பாவி பொதுமக்கள் ஆடு,மாடு சிறு மற்றும் குறு வியாபாரிகளை தேர்தல் நடத்தை விதிமுறைகள் என அலுவலர்கள் கெடுபிடிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், வணிக நல அமைச்சகம் உருவாக்க மாநில அரசு முன் வரவேண்டும், வணிகர் நல வாரியம் வணிகர் நல சங்கப் பிரதிநிதிகளுடன் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டும், ஜி.எஸ்.டி வரி மற்றும் உணவுப் பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டங்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, எளிமைப்படுத்த வேண்டும், தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி, அறநிலையத்துறை, கட்டிட வாடகை மற்றும் வரியை சீரமைக்க வேண்டும், கொரோனா காலத்தில் உயிரிழந்த வணிக குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். ஒரே நாடு, ஒரே வரி என்கிற அடிப்படையில், ஒரே உரிமம் ஒற்றைச் சாரள முறையில் ஒரே முறையை கொண்டு வர வேண்டும், வெள்ளி கைவினைப் பொருட்கள், கொலுகளுக்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும், பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தில் தொழில் பேட்டைகள் அமைத்து வேலைவாய்ப்புகள், பெருக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மே.5- வணிகர் தின மாநாட்டை சிறப்புற நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் ஜி.ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். கூட்டத்தில் அமுதா ஸ்டோர் தினகா, வேப்பந்தட்டை தலைவர் சி.ஞானவேல், அரும்பாவூர் குறிஞ்சி சிவா உள்ளிட்ட வணிகர்கள் பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் கலந்து கொண்டனர்.