Oct.4th Namakkal., in the consultative meeting of the DMK pro teams
நாமக்கல்லில் வரும் அக்டோபர் 4ம் தேதி திமுக சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் காந்தி செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
நாமக்கல் கிழக்குமாவட்டதிமுக சார்புஅணிகளின்ஆலோசனைக்கூட்டம்வரும் அக்டோபர் 4ம் தேதி வியாழக்கிழமை காலை10 மணிக்கு நாமக்கல் திருச்சிசாலைமாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் தலைமை வகிக்கிறார். மாநில இளைஞர் அணிதுணைசெயலாளர் தாயகம் கவி எம்எல்ஏ சிறப்புஅழைப்பாளாராககலந்துகொள்கிறார்.
இக்கூட்டத்தில் கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது. எனவேமாவட்டஅளவிளானசார்புஅணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்