Of Rs 12 lakh per annum, making food traders can register by e-Service Center: Collector

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு :

பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கும், வணிகர்களுக்கும் உணவு பொருட்களின் தரம் குறித்தும், விற்பனை குறித்தும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் 2006-ன்படி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் மற்றும் பதிவு பெறுவதற்கு உணவு பாதுகாப்பு துறை மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது.

ஆண்டிற்கு 12 லட்சம் ரூபாய்க்குள் விற்பனை செய்து கொள்முதல் செய்யும் உணவு வணிகர்கள், இ-சேவை மையங்கள் மூலம் பதிவுச்சான்று பெறலாம்.

உணவுப்பொருட்களின் தரம் குறித்தான புகார்களை தெரிவிக்க புதிய வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தரமற்ற உணவுப்பொருட்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குறித்த புகார்களை 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தெரிவிக்கலாம்.

உணவு பாதுகாப்பு மற்றும் தரம் குறித்த தகவல்கள் மற்றும் விளக்கங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இரண்டாம் தளத்தில் இயங்கும் நியமன அலுவலர், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை, உணவுப் பாதுகாப்பு பிரிவு அலுவலகத்தை 04328-224033 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!