On behalf of the District Legal Services Commission, the mental health day function was attended by the judges.

பெரம்பலூர் : ஆண்டு தோறும் அக்டோபர் 10ந் தேதி உலக மனநல தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள அன்பகம் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு பயிற்சி மையத்தில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் மனநல தின விழா மற்றும் சட்ட உதவி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமில், அன்பகம் பள்ளி சிறப்பு ஆசிரியை மணிமேகலை வரவேற்றார். சார்பு நீதிபதி எஸ்.ஜெயந்தி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான எம்.வினோதா, மாவட்ட உரிமையியல் நீதிபதி மகேந்திர வர்மா, நீதித்துறை நடுவர் கே.மோகனப்பிரியா, ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகிளா நீதிமன்ற நீதிபதி என்.விஜயகாந்த்,தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் எம்.சஞ்சீவி பாஸ்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவிற்கு தலைமை வகித்த பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பாலராஜமாணிக்கம் பேசியதாவது :

இந்த குழந்தைகள் கடவுளின் குழந்தைகள்,

சமுதாயத்தில் பிறரால்,பெரிய மனிதர்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள் நிச்சயமாக பெரிய மனிதர்கள் அல்ல. பிறர் நலம் பேனுபவர்கள் தான் பெரிய மனிதர்கள். உண்மையாக பெரிய மனிதர்கள் என்று ஒருவரை சொல்ல வேண்டுமென்றால் பிறருக்கு உதவி செய்பவர், பிறர் நலனில் அக்கறை உள்ளவர், இந்த சமுதாயத்திற்கு நல்லதை செய்பவர்கள் தான் பெரிய மனிதர்கள் என்றார். மற்ற பெரிய மனிதர்கள் எல்லாம் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் அல்லது பிறரால் பெரிய மனிதராக கற்பனை செய்யப்படுவர்கள், கருதப்படுபவர்கள் என்றார். இதைத்தான் திருவள்ளுவர் சொல்வார் ” தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும் ”
என பேசிய நீதிபதி, சிறு கதை ஒன்றையும் கூறினார்.

அதாவது; ஒரு இறுதி ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது. அங்கு ஞானிகள், முனிவர்கள் மக்கள் ஆகியோர் இருந்தனர். இப்போது ஒரு மனிதனின் இறுதி ஊர்வலம் நடந்தது. அங்கிருந்த ஞானி கேட்டார். இறந்த மனிதன், சொர்கத்திற்கு செல்கிறானா, அல்லது நரகத்திற் செல்கிறானா என்பதை அறிந்து வர ஞானியை அனுப்பினர். திரும்பி வந்த அவர், இறந்த போன மனிதன் சொர்க்கத்திற்குதான் செல்கிறார் என பதிலளித்தார், அங்கிருந்தவர் எப்படி சொர்க்கத்திற்கு செல்வதை பார்த்தாய்! என கேட்டனர். அப்போது ஞானி பதிலளித்தார் : இறுதி ஊர்வத்தில் சென்று பார்க்கும் போது, இறந்து போனவர் பல உதவிகளை செய்தவர், பல புண்ணியங்களை செய்தவன் என அங்கிருப்பவர்கள் பேசினால், அவர் சொர்க்கத்திற்கு போகிறார் என்று பொருள், பாவி இத்தனை பேரை கெடுத்திட்டு, போரான் என பேசினால் நரகத்திற்கு போகிறார் என்று அர்த்தம். நாம் பிறருக்காக என்ன கொடுக்கிறோம் என்று நினைத்து பார்க்க வேண்டும்.

இங்கு ஆசிரிய பெருமக்கள், பராமரிப்பது பாடம், நடத்துவது சாதாராண வேலை அல்ல, மிகச் சிறந்த சேவை. இந்த சேவைக்கு ஈடு இணை இல்லை என பாராட்டி பேசினார்.

விழாவில், கலந்து கொண்ட நீதிபதிகள் மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கேக் வழங்கினர். சீனிவாசன் என்ற மாணவன் நன்றி தெரிவித்தார். அந்த மாணவர்களுக்கு அரசு வழக்கறிஞர் கனகராஜ் ரூ. 5 ஆயிரம் நன்கொடை வழங்கினார். வழக்கறிஞர் சங்க செயலாளர் சுந்தரராஜன், வழக்கறிஞர் வெள்ளைச்சாமி, பேரா.முருகையன் , அன்பகம் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள், உள்ளிடட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!