One day awareness tour for Perambalur district government school students
2018-19ம் ஆண்டிற்கான சுற்றுலா மானியக்கோரிக்கையின்போது, சுற்றுலாத்துறை அமைச்சர் “தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களிலும் உள்ள உள்ளூர் சுற்றுலா மையங்கள் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களுக்கு ஏற்படுத்த “ஒருநாள் விழிப்புணர்வு சுற்றுலா” நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
அதன்படி, பெரம்பலூh; மாவட்டத்தில் இந்நிகழ்ச்சியினை இன்று (24.10.2018) மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் (பொ) அழகிரிசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய 150 மாணவ, மாணவியர்களை (மாணவர்கள் 75, மாணவியர்கள் 75) மற்றும் அவர்களுக்கு பாதுகாப்பாக (ஆண் ஆசிரியர்கள் 6, பெண் ஆசிரியைகள் 6) மொத்தம் 12 நபர்கள் உடன் சென்றனர்.
மேற்படி, சுற்றுலாவில் கலந்துகொள்ளும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் காலை மற்றும் மதிய உணவு, காலை மற்றும் மாலை நொறுக்கு தின்பண்டங்கள் அத்துடன் அனைவருக்கும் தோள்பையும் வழங்கப்பட்டது.
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கிடையே வினாடி வினா போட்டி வைத்து பரிசுகள் வழங்கப்பட்டது. மேற்படி சுற்றுலாவிற்கு 3 சொகுசு பேருந்துகளில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இச்சுற்றுலாவில் தஞ்சாவூர் அரண்மனை, தஞ்சை பெரியகோவில், பூங்கா, அரியலூர் கல்லங்குறிச்சி கலியுகவரதராஜப்பெருமாள் கோவில், பெரம்பலூர் ரஞ்சன்குடி கோட்டை மற்றும் சாத்தனூர் கல்மரபூங்கா ஆகிய இடங்களை காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் முதன்மைகல்வி அலுவலர் அருள்அரங்கன், உதவி சுற்றுலா அலுவலர் சி.வரதராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.