One day free training on farm poultry farming in Namakkal: Agricultural Science Center
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட தலைவர் டாக்டர் அகிலா வெளியிட்டுள்ள தகவல்:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 12ம் தேதி வெள்ளிக் கிழமை காலை 9 மணிக்கு நாட்டு கோழி வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இப்பயிற்சி முகாமில் நாட்டுக்கோழி இனங்கள், கொட்டகை அமைப்பு, தீவன மேலாண்மை, நோய் மேலாண்மை, இனப்பெருக்க மேலாண்மை, முட்டை அடைகாக்கும் முறை, இளம்குஞ்சுகள் பராமரிப்பு மற்றும் தரம் உயர்த்தப்பட்ட நாட்டு கோழி ரகங்கள் வளர்ப்பு குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும்.
இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.விருப்பமுள்ளவர்கள் நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்திற்கு நேரில் வந்தோ அல்லது தொலைபேசி மூலமாகவோ வரும் 12ம் தேதி காலை 9மணிக்குள் பெயரை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பயிற்சிக்கு பதிவு செய்வதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக பதிவு செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார்.