Online Fraud: Perambalur Cyber Crime Police Arrested Criminals in Delhi!

பெரம்பலூர் மாவட்டம், தொண்டைமாந்துறையை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (20) நபரை ஆன்லைன் மோசடி கும்பல் ஒன்று தொடர்பு கொண்டு, ஸ்னாப்டீலில் வாங்கிய கைக்கடிகாரத்திற்கு பரிசாக ரூ.12,80,000 மதிப்புள்ள மகேந்திரா XVU 500 என்ற கார் வென்றுள்ளீர்கள் என்று ஆசை வார்த்தைகளை கூறி அதற்கான பொய்யான சான்றிதழை ஆனந்தின் வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்தனர். அதனை உண்மை என நம்பிய ஆனந்த் அதற்கு ரிப்ளை செய்துள்ளார்.

மேலும் அதற்கு வரி செலுத்துமாறு முதலில் ரூ.58,000 செலுத்துமாறு ஒரு வங்கி கணக்கு எண்ணை அனுப்பி உள்ளனர். அந்த வங்கி கணக்கிற்கு ஆனந்த் கேட்ட தொகையை செலுத்தினார். அதன் பிறகு தொடர்ந்து வெவ்வேறு வங்கி கணக்கிற்கு பணம் செலுத்துமாறு கூறிய மோசடி கும்பலின் ஆசை வார்த்தைகளை நம்பி தவணை தவணையாக. ரூ. 6,34,000 ரூபாய் செலுத்தியுள்ளார். இவ்வளவு தொகை செலுத்தியும் கார் வரவில்லை அதற்கான வாய்ப்பும் இல்லை என தெரிந்த பின்னர், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி-யிடம் புகார் அளித்தார்

மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை தீவிரமாக நடந்து வந்த நிலையில், குற்றவாளிகளை அடையாளம் கண்ட சைபர் கிரைம் காவல் துறையினர் குற்றவாளிகளள் டெல்லியை சேர்ந்தவர்கள் என கண்டுபிடித்தனர்.

சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்மனோஜ்குமார் மற்றும் அவரது குழுவினர் கொண்ட தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு அவர்கள் டெல்லி சென்று குற்றவாளிகளான காசியாபாத்தை சேர்ந்த கிஷான் துளசிராம், ரோகித் பால், ஹரியானாவை சேர்ந்த அங்கி பன்சால் ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும் போலியான சிம்காடுகளையும் கைப்பற்றினர், பெரம்பலூர் மாவட்டத்திற்கு கொண்டு வந்தனர்.

குற்றவாளிகள் மூவரும் பெரம்பலூர் மாவட்ட அமர்வு நீதிபதியின் முன்பு ஆஜர் படுத்தப்பட்டு பின் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட சைபர் கிரைம் போலீசாரை, எஸ்.பி மணி உள்ளிட்ட பலர் பாராட்டினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!