English Summary : Opens on July 21 st in Perambalur the district-level monthly tournaments: District Sports and Youth Welfare Officer Information
பெரம்பலூர் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வரும் ஜுலை 21. ம் துவங்குகிறது.
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ம. இராமசுப்பிரமணியராஜா விடுத்துள்ள தகவல் :
பெரம்பலூர் மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் வரும் ஜுலை 21.ம் அன்று காலை 8.30 மணிக்கு மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது
12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவஃமாணவிகளுக்கு தடகளம், நீச்சல், கபடி ஆகிய விளையாட்டுக்கள் நடத்தப்பட உள்ளது.
தடகளப் போட்டியில் 100 மீ ஓட்டம், 400 மீ ஓட்டம், 1500 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல். ஆகிய போட்டிகள் நடத்தப்படவுள்ளது.
கபடி போட்டிகள் மாணவ – மாணவிகள் இருபாலருக்கும் நடைபெறும்.
நீச்சல்(Swimming 50m, 100m, 200m, 400m, free Style 50 m- Back Storke 50 m,50m- Breast Stroke, 50 m- Butterfly Stroke, 200m Individual medley ) ஆகிய போட்டிகள் மாணவ – மாணவிகள் இருபாலருக்கும் நடைபெற உள்ளது.
போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். எனவே, அனைத்து பள்ளி, மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.