Panchayat Secretary suspended: the welcome banner, thanking the public
பெரம்பலூர் அருகே ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்து பொது மக்கள் பதாகை வைத்து வரவேற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட வயலப்பாடி, கீரனூர், வீரமநல்லூர் ஆகிய மூன்று கிராமங்களிலுள்ள 9 வார்டுகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கிராமப்புறங்களில் நோய் பரவுவதை தடுத்திடவும், சுகாதாரத்தை பேனிகாத்திடவும் கட்டப்பட்டு வரும் தனி நபர் கழிப்பறைகளை கட்டுவதில் வயலப்பாடி ஊராட்சியில் செயலாளராக கூடுதல் பொறுப்பு வகிக்கும், ஓலைப்பாடி ஊராட்சி செயலாளர் ராமச்சந்திரன் போதிய ஆர்வம் காட்டாததால் பணிகள் தாமதமாக நடைபெற்று வருவது பெரம்பலூர் மாவட்ட திட்ட இயக்குனர் சிவராமனின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து தனி நபர் கழிவறை கட்டுமான பணிகளை விரைந்துமுடித்திட வேண்டுமென பலமுறை அறிவுறுத்தியும், பணிகள் முடித்திட எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வயலப்பாடிஊராட்சி செயலாளர்(பொ) ராமச்சந்திரனை மாவட்ட திட்ட இயக்குனர் சிவராமன் அறிவுறுத்தலின் பேரில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) முரளிதரன் பணிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஓலைப்பாடி ஊராட்சியில் மக்கள் நலப்பணியில் தொடர்ந்து ஊழலில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளரை பணியிடை நீக்கம் செய்த தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி! நன்றி! நன்றி! என கிராம பொது மக்கள் சார்பில் இன்று வேப்பூர் பேருந்து நிலையத்தில் டிஜிட்டல் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.