Passengers, driver conductors suffer due to intimidation by beggars at the new bus stand in Perambalur!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், மிரட்டி பிச்சை கேட்பவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என கடும் அவதி அடைந்து வரும் பயணிகள், டிரைவர்கள், கண்டக்டர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திற்கு, புதுச்சேரி மாநிலம், வேலூர், விழுப்புரம், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, ஆகிய மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். அதோடு, மட்டும் இல்லாமல், பணி, கல்வி, மருத்துவம், வியாபார காரணங்களுக்காகவும், பெரம்பலூர் மற்றும் கிராம பகுதியினரும் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், பிச்சை எடுக்கும் நபர்கள் நாளுக்கு அதிகரித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், பெரம்பலூருக்கு வருகை தரும் பயணிகளின் உடமைகளும், அவ்வப்போது திருடு போவதும் நடந்து வருகிறது. இதனை தடுக்க பிச்சை எடுக்க பேருந்தினுள் செல்பவர்களை ஓட்டுனர்கள், நடத்துனர்கள் தடுத்தால், பிச்சை எடுப்பவர்கள் ஒன்று கூடி, தகாத வார்த்தைகளால், திட்டுகின்றனர். அதோடு, உன் பொண்டாட்டி பஸ்சா, உன் பொண்டாட்டி பேரில் இருக்கிறதா என ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களை பயணிகள் முன்னிலையில், கேள்வி கேட்டு மிரட்டி அவமானப்படுகின்றனர்.

மேலும், பிச்சை எடுப்பவர்கள் பெண்கள், மாணவர்களிடம் மிரட்டும் தோணியில் பிச்சை கேட்கின்றனர், பிச்சை கொடுக்காதவர்களை வசைபாடுவதுடன், அவமரியாதையாக நடத்துகின்றனர். இதோ போல், பெரம்பலூர் பிக்பாக்கட் திருடர்களின் ஆதிக்கமும், அதிகரிகத்து வருகிறது. இதனால், கிராமப் புற பெண்கள், டவுன் பஸ்சில், ஏற முயலும் போது, கைப்பைகளில் வைத்துள்ள செல்போன் பணம், உள்ளிட்ட ஆவணங்களை திருடி தப்பி சென்றுவிடுகின்றனர்.

பேருந்து நிலையத்திற்குள் புறக்காவல் நிலையம் இருந்தாலும், டம்மி போலீசார் உள்ளதால், பிக்பாக்கட் திருடர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது. பேருந்து நிலையத்தில், போலீசாரின் எண்ணிக்கையை விட பிச்சை எடுப்பவர்கள், பிக்பாக்கட்டுகளின் எண்ணிக்கை அதிமாக உள்ளதால், போலீசார் கண்டும் காணாமல் பின்வாங்கி செல்கின்றனர்.

பெரம்பலூர் பேருந்து நிலையத்தில், பிக்பாக்கட் மற்றும், மிரட்டி பிச்சை எடுப்பவர்களை அப்புறப்படுத்தி அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அச்சமின்றி, நிம்மதியுடன் பெண்கள் மாணவர்கள், வெளியூர் பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள், வந்து செல்ல சுழற்சி முறையில் அதிக அளவில் காவலர்கள் கைத்தடியுடன் பணிக்கு அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!