People of Perambalur district should not go to water bodies as monsoon continues: Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் சிறுவாச்சூர் மற்றும் ஜமீன் பேரையூர் கூடலூர் இடையே உள்ள மருதையாற்றின் குறுக்கே உள்ள தரைபாலத்தின் மேல் தண்ணீர் செல்வதை பார்வையிட்ட அவர் பாலத்தில் மக்கள் செல்லாத வண்ணம் கண்காணிக்க அலுவலரை நியமித்து தொடர்ந்து கண்காணித்திட உத்தரவிட்ட அவர் மேலும், தெரிவித்தாவது:

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலம் போர்கால அடிப்படையில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடகிழக்கு பருவமழை காலத்தில் பேரிடர் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில், பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்திட ஏதுவாக மாவட்டத்தின் அனைத்துப் பகுதியிலும் உள்ள சமுதாயக்கூடங்கள், பள்ளிக்கட்டடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் என பொதுமக்கள் தங்குதற்கு தேவையான வசதிகள் கொண்ட கட்டடங்கள் தேர்வு செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் ஏரி,குளங்கள் விரைவாக நிரம்பி வருவதாலும் உபரி நீர் வெளியேறி ஓடை, ஆற்றுப்பகுதி போன்ற நீர் வழித்தடங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. காட்டாறுகளில் வெள்ளம் வர அதிக வாய்ப்புள்ளது. மேலும் அதன் வேகத்தினை கணிக்க இயலாத காரணத்தால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் நீர்நிலைகளை பார்வையிடவோ அருகில் செல்லவோ வேண்டாம். பெற்றோர்கள் குழந்தைகளை கவனமாக கவனித்துக்கொள்ள வேண்டும். மரம் மற்றும் மின்கம்பங்கள் அருகில் செல்ல வேண்டாம். ஓட்டு வீடு, குடிசை வீடு, மற்றும் தாழ்வான பகுதிகளில் குடியிருப்பவர்கள் அருகில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று பாதுகாப்பாக தங்கிகொள்ள வேண்டும். அங்கு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

24 மணி நேரமும் பேரிடர் மீட்பு துறை தயாராக இருப்பதால் பொதுமக்கள் அச்சபடத் தேவையில்லை எனவும், மேலும் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதை தவிர்த்து, ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!