People who claim the status of a girl named Yalini can communicate with suitable sources

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா விடுத்துள்ள தகவல் :

சிறுமி யாழினி வயது 5 (2017) என்பவர், கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திலுள்ள வண்டூர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மூதாட்டி ஒருவரால் சந்தேகத்திற்கிடமான முறையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறை மூலம் மீட்கப்பட்டு 05.04.2016 அன்று மலப்புரம் குழந்தை நலக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டு மலப்புரம் மாவட்டத்திலுள்ள குழந்தை பராமரிப்பு நிறுவனத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். விசாரணையில், தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் பெரிய கோவிலில் ஆறு மாத குழந்தையாக இருந்தபோது சிறுமியை வாங்கி வந்ததாக மூதாட்டி தெரிவித்துள்ளார்.

தற்போது சிறுமி யாழினி 115செ.மீ உயரமும் 17 கிகி எடையும் மாநிறமும் உடையவர். சிறுமி தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகள் பேசுகிறார். சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதுநாள் வரையில் கண்டறியப்படவில்லை. மேலும் சிறுமியை எவரும் உரிமை கோரவில்லை.

சிறுமி யாழினி தொடர்பாக எவரேனும் உரிமை கோர விரும்பினால் உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் ‘மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, 3ஆம் தளம், மினி சிவில் ஸ்டேஷன், மஞ்சேரி, மலப்புரம் மாவட்டம், கேரளா 676121, தொலைபேசி எண் 04832978888, மின்னஞ்சல் முகவரி dcpumpm@gmail.com , என்ற முகவரியில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 30 தினங்களுக்குள் அணுகுமாறும் குறிப்பிட்ட காலத்திற்குள் குழந்தை தொடர்பாக எவரும் உரிமை கோராத நிலையில் குழந்தை தத்தெடுப்புக்கு தகுதியான குழந்தையாக கருதப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், கூடுதல் விபரங்களுக்கு, ‘மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, எண்.164, இரண்டாம் தளம், எம்.எம்.பிளாசா, திருச்சி மெயின்ரோடு, பெரம்பலூர்” என்ற முகவரியிலோ அல்லது 04328 275020 என்ற தொலைபேசி எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!