பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் செல்போன் நிறுவன ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்த அன்பழன் மகன் மோகன்ராஜ் (25), சிம் கார்டு விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்த இவர் இன்று அகரம் சீகூரில் சிம்கார்டுகளை விற்பனை செய்து விட்டு இரு சக்கர வாகனத்தில் அகரம்சீகூர் அரியலூர் சாலையில் புதுவேட்டக்குடி கிராமம் அருகே வந்து கொண்டு இருந்தார்.
அப்போது புதுவேட்டக்குடியிலிருந்து துங்கபுரம் நோக்கி துங்கபுரம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன்(27), என்பவர் ஓட்டிச்சென்ற புதியரக அதிவேக டூவீலர், மோகன்ராஜ் ஓட்டி வந்த டூவீலர் மீது நேருக்கு நேர் பலமாக மோதியது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மோகன்ராஜு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மணிகண்டன் பலத்த காயமடைந்து பெரம்பலூர் அரசு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவலறிந்த மங்களமேடு போலீஸ் டி.எஸ்.பி ஜவஹர்லால் குன்னம் இன்ஸ்பெக்டர் அலாவுதீன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.