Perambaluar Medical Association for the people, Aid to the poor student in medical studies of Rs 1 lakh!
பெரம்பலுார்: உரையாடல் என்ற அமைப்பு சார்பில், ஆயுஸ்மான் பாரத் யாருக்காக என்ற தலைப்பில், பெரம்பலுாரில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.
லட்சுமி லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் நடந்த கருத்தரங்கத்துக்கு, டாக்டர் கருணாகரன் தலைமை வகித்தார். பகுத்தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் ஆசிரியர் நடராஜன் வரவேற்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாவட்டச்செயற்குழு உறுப்பினர் பாரதி ஆறுமுகம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
கருத்தரங்கில், த.மு.எ.ச., திருச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் கவிஞர் சரவணன், இந்துத்துவ இந்திய அரசும், தலித்திய மார்க்ஸிய அறிஞர்களும் என்ற தலைப்பில் பேசினார். கருத்தரங்கில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் காட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
முன்னதாக, ஏழை மருத்துவ மாணவி கனிமொழி என்பவருக்கு, மக்களுக்கான மருத்துவக் கழகம் சார்பில், கல்வி நிதியுதவியாக ஒரு லட்சம் ரூபாயை ஓய்வு பெற்ற இணை இயக்குநர் குணகோமதி வழங்கினார். முடிவில் பட்டதாரி ஆசிரியர் சக்திவேல் நன்றி கூறினார்.