Perambalur: 10 Drinking Water Purification Plants Worth Rs 91.5 Lakhs; Minister Sivasankar Inaugurates!

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிந்தராஜப்பட்டினம், வ.கீரனூர், அகரம்சீகூர், அத்தியூர், ஒகளுர், கழனிவாசல், பென்னக்கோணம், வடக்கலூர், பேரளி, பெரியம்மாபாளையம் ஆகிய கிராமங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைகளின் சார்பில் கனிமம் மற்றும் சுரங்கங்கள் நிதியின் மூலம் தலா ரூ.9.15 லட்சம் வீதம் மொத்தம் ரூ.91.5 லட்சம் மதிப்பில் 10 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை இன்று தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வகுமார், சேகர், குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை, ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், அழகு.நீலமேகம், ராஜேந்திரன், முன்னாள் வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பல்டாக்டர் கருணாநிதி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!