Perambalur: 1,069 kg of gutkha, pan masala, and koolie seized in cases were destroyed by setting fire in the presence of the Collector and SP!

பெரம்பலூர் மாவட்டத்தில் காவல்துறையினர் மற்றும் உணவுப் பாதுகாப்புத்துறையினரின் பல்வேறு ஆய்வுகளின்போது மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 1,069 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, கூலிப், உள்ளிட்ட பொருட்கள் கலெக்டர் மிருணாளினி போலீஸ் எஸ்.பி அனிதா ஆகியோர் முன்னிலையில் நெடுவாசல் சாலையில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில் ஆழக்குழித் தோண்டி கொட்டி எரித்து அழிக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, கூலிப், உள்ளிட்ட பொருட்களை யாரும் எங்கும் வாங்கவோ விற்கவோ கூடாது என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இத்தகைய பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், தடைசெய்யப்பட்ட பொருட்களை தயாரித்தல், சேமித்து வைத்தல், விநியோகித்தல், வாகனங்களில் எடுத்து செல்லுதல், விற்பனை செய்தல், பயன்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது.
இந்நிலையில், பெரம்பலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் 62 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 207.075 கிலோ அரசால் தடைசெய்யப்பட்ட உணவு கலந்த புகையிலை பொருட்கள், பாடாலூர் காவல் நிலையத்தில் 51 வழக்குகளில் கைப்பபற்றப்பட்ட 112.258 கிலோ, அரும்பாவூர் காவல் நிலையத்தில் 21 வழக்குகளில் கைப்பபற்றப்பட்ட 20.425 கிலோ , மருவத்தூர் காவல் நிலையத்தில் 34 வழக்குகளில் கைப்பபற்றப்பட்ட 350.087 கிலோ அரசால் தடைசெய்யப்பட்ட உணவு கலந்த புகையிலை பொருட்களும், குன்னம் காவல் நிலையத்தின் மூலம் 96 வழக்குகளில் கைப்பபற்றப்பட்ட 142.196 கிலோ,
பெரம்பலூர் வட்டார காவல் நிலையத்தில் 22 வழக்குகளில் கைப்பபற்றப்பட்ட 34.511 கிலோ, மங்களமேடு காவல் நிலையத்தில் 76 வழக்குகளில் கைப்பபற்றப்பட்ட 148.931 கிலோ, வி.களத்தூர் காவல் நிலையத்தில் 45 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 45.57 கிலோ, கை, களத்தூர் காவல் நிலையத்தில் 20 வழக்குகளில் கைப்பபற்றப்பட்ட 8.32 கிலோ அரசால் தடைசெய்யப்பட்ட உணவு கலந்த புகையிலை பொருட்களும் என பெரம்பலூர் மாவட்ட அளவில் 9 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 427 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட அரசால் தடைசெய்யப்பட்ட உணவு கலந்த புகையிலை பொருட்களான ஹான்ஸ், கூல்லிப், விமல், ஏ-1 பான்மசாலா, ஸ்வாகத், ஏ-1 டொபோக்கோ உள்ளிட்ட 1069.373 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை பெரம்பலூர் அருகே நெடுவாசல் சாலை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகில் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படா வண்ணம் ஆழக்குழிதோண்டி கொட்டி எரித்து அழிக்கப்பட்டது. முழுவதும் எரிந்த பின்னர் மீண்டும் மண்ணிட்டு குழி மூடப்பட்டது.
டி.ஆர்.ஓ கண்ணன், ஏ.டி. எஸ்.பி பாலமுருகன், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் டாக்டர் சுகந்தன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கதிரவன், சின்னமுத்து, புவனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497