Perambalur: 11 direct paddy procurement centers opened; Collector informs!
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்ய பெரம்பலூர் தாலுக்காவில் குரும்பலூர், வேப்பந்தட்டை தாலுக்காவில் அரும்பாவூர், இனாம் அகரம், அன்னமங்கலம், தொண்டமாந்துறை மற்றும் பூலாம்பாடி, குன்னம் தாலுக்காவில் அகரம்சீகூர், கோவில்பாளையம், வசிஷ்டபுரம், நன்னை மற்றும் காடூர் ஆகிய 11 நேரடி நெல் கொள் முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் மூலமாக தற்போது வரை 2,168 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கூடுதலாக தற்பொழுது 25.02.2025 அன்று முதல் குன்னம் தாலுக்காவில் வடக்கலூர், துங்கபுரம், ஒகளூர், அத்தியூர் மற்றும் எழுமூர், வேப்பந்தட்டை வட்டத்தில், கைகளத்தூர், வெங்கலம் ஆகிய 7 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது சன்னரகம் நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,450/-. பொதுரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2405/- என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வியாபாரிகளிடம் அனுகாமல், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களின் நெல்லினை விற்பனை செய்து பயனடையுமாறு கலெக்டர் கிரேஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.