Perambalur: 2 flyovers to reduce traffic congestion; A.Raja MP, who campaigned in support of DMK candidate Jayalakshmi, promised!!

பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜெயலட்சுமியை ஆதரித்து, உதயசூரியன் சின்னத்திற்கு, திமுக துணைப்பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி பெரம்பலூர் மாவட்டத்தில் பூலாம்பாடி, அரும்பாவூர், எசனை, பெரம்பலூர் நகரில் அனல்பறக்கும் சூறாவளி சுற்றுப்பிரச்சாரத்தை மேற்கொண்டு வாக்குகளை சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டிலிருந்து பெறும் வரியை பிரித்து தருவதில் பாரபட்சம், தமிழகத்திற்கு வழங்கிட வேணடிய கல்வி நிதி 2000 கோடியை தரமறுப்பது என தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் மோடியையும். அமித்ஷாவையும் தமிழ்நாட்டில் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்துவது தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்என்பதால் தான், நேரடியாக நுழைய முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி மூலம் கால்பதிக்க நினைக்கிறது பா.ஜ.க என நீலகிரி தொகுதி எம் பி ஆ.ராசா பேசினார்.
பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் ஜெயலட்சுமிக்கு ஆதரவாக திமுக துணை பொதுச்செயலாளரும் நீலகிரி எம்.பியுமான ஆ. இராசா, பூலாம்பாடி, அரும்பாவூர், எசனை பெரம்பலூர் நகரில் தேர்த்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் பெரம்பலூர் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு நிறைவேற்றியுள்ள திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
20-ஆண்டுகளுக்கு முன்பு வேப்பந்தட்டை பகுதியில் திமுக அரசு நிறைவேற்றிய கூட்டு குடிநீர் திட்டத்தால் இன்றுவரை குடிநீர் தட்டுபாடு இல்லாமல் உள்ளதாக தெரிவித்த அவர், தற்போதை திமுக ஆட்சியில் மீண்டும் பெரம்பலூருக்கு 350 கோடியில் காவேரி கூட்டு குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டு இன்னும் ஒரு மாதத்தில் குடிநீர் விநியோகம் வழங்கப்படவுள்ளது இத்திட்டத்தால் இன்னும் 50 ஆண்டுகளுக்கு பெரம்பலூரில் குடிநீர் பஞ்சமே வராது என்றார்.தமிழ்நாட்டிலிருந்து பெறும் ஜி.எஸ்.டி வரியை பிரித்து தருவதில் பாஜக அரசுபாரபட்சம் காட்டி வருகிறது, நாம் தரும் ஒரு ரூபாய் ஜி.எஸ்.டி வரியில், தமிழ்நாட்டிற்கு வெறும் 26- பைசாவை மட்டுமே தருகிறது ஆனால் குஜராத் மாநிலம் ஒரு ரூபாய் தந்தால் அவர்காளுக்கு ஒரு ரூபாய் 40 காசுகள் திருப்பி தருகிறது.அதுமட்டுமில்லை தமிகத்திற்கு வழங்கிட வேணடிய கல்வி நிதி 2000 கோடியை ரூபாயை இதுவரை தரமறுத்து வருகிறது.
இதுபோல் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வரும் மோடியையும். அமித்ஷாவையும் தமிழ்நாட்டில் உள்ளே விடாமல் தடுத்து நிறுதுவது தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் சக்தி என்று தெரிவித்த அவர் ஏனென்றால், ஸ்டாலின் தனி ஆள் கிடையாது அவருக்கு பின்னால் பெரியார் அண்ணா மற்றும் கலைஞர் எனும் மாபெரும் சக்திகள் உள்ளனர் என்றார். அதனால்தான், மோடியும் அமித்ஷாவும் நேரடியாக நுழைய முடியாமல் எடப்பாடி பழனிச்சாமி என்ற தமிழ்நாட்டவர் மூலம் கால்பதிக்க நினைக்கிறார்கள் என்று விமர்சித்தார். அதனால்தான் இந்த தேர்தல் திமுகவுககும் அதிமுகவுக்கு மானது அல்ல! தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்குமானது என்பதை உணர்ந்து திமுக வேட்பாளர் டாக்டர் ஜெயலட்சுமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.
பெரம்பலூர் நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் துறையூர் சாலையில் அரசு மருத்துவமனையில் இருந்து துறைமங்கலம் ஏரிக்கு செல்லும் ஏரிப்பகுதியிலேயே திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் எனவும் பாலக்கரையில் இருந்து ஆத்தூர் சாலையை இணைக்கும் வகையில் புதிய மேம்பாலம் அமைத்து மக்களின் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும் எனவும் பேசினார்.
மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினரும், நகர செயலாளருமான எம்.பிரபாகரன், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மு.அட்சயகோபால், வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், செ.அண்ணாதுரை, ஆர்.முருகேசன், டி.கே.ராமச்சந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர்,நூருல்ஹிதா இஸ்மாயில், சன்.சம்பத், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர் எம்.ராஜ்குமார் உள்ளிட்ட தி.மு.க.வினர் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.











kaalaimalar2@gmail.com |
9003770497