Perambalur: 2 people arrested for extorting money at knifepoint in a hotel!
பெரம்பலூர் அருகே உள்ள கல்பாடி பிரிவு சாலை எதிரே உள்ள தோசா இன்பினிட்டி என்ற உணவகத்திற்கு ஸ்கூட்டியில் வந்த 2 இளைஞர்கள் கேசியர், வாட்ச்மேன் ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி கல்லாவில் இருந்த ரூ.14 ஆயிரத்தை திருடி சென்று விட்டதாக உணவகத்தின் வரவேற்பாளர் பாலமுருகன் கொடுத்த புகாரின் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார்,
சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார் தலைமையில் தனிப்படையினர் விசாரணையில் ஈடுபட்டதோடு, சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தில், திருட்டில் ஈடுபட்ட விளாமுத்தூரை சேர்ந்த ரமேஷ் (18) அதே ஊரை சேர்ந்த சுப்பரமணியன் மகன் பிரகாஷ் ஆகியோர் என்பதை உறுதிப்படுத்திய போலீசார், இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறை காவலுக்கு அனுப்பி வைத்தனர்.