Perambalur: 3 people arrested for looting temple Hundi’s!
பெரம்பலூர், குன்னம் அருகே உள்ள பெரியாண்டவர் கோவில் பகுதியில் குன்னம் போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் தலைமையிலான தனிப்படையினர் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவ்வழியாக சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் வந்த புதுவேட்டக்குடி சேர்ந்த கிருஷ்ணன் மகன் ராஜீவ்காந்தி, மருதமுத்து மகன் செல்லமுத்து (48), மாரிமுத்து மகன் மணிவேல் (49), 3 பேரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் மூவரும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் மேலும் விசாரணை செய்ததில், அவர்கள் மூவரும் பெரம்பலூர், பாடாலூர், குன்னம் ஆகிய பகுதிகளில் உள்ள கோவில்களில் உண்டியல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
பின்னர், அவர்களை கைது செய்த குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரூ. 38 ஆயிரம் ரொக்கம், 2 கிராம் தாலி ஆகியவற்றை பறிமுதல் செய்ததோடு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.