Perambalur: 3 youths arrested for threatening and extorting money from a garlic vendor with a knife! Police take action!!
பெரம்பலூர் மாவட்டம், அனுக்கூர் குடிக்காட்டைச் சேர்ந்த கொளஞ்சி மகன் பாஸ்கர் (34) லோடு ஆட்டோவில் வைத்து பூண்டு வியாபாரம் செய்து வருகிறார். நேற்றிரவு 10.30 மணிக்கு வடக்குமாதவி ரேசன் கடை அருகே பாஸ்கரும், அவரது மாமன் மகனும் ஆட்டோவில் வந்து கொண்டிருந்த போது அவர்களை வழிமறித்து 3 மர்ம நபர்கள் கத்தியை காட்டி தன்னிடம் இருந்த ரூ. 2 ஆயிரத்தை வழிப்பறி செய்ததாக பெரம்பலூர் போலீசில் புகார் அளித்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீஸ் சப் – இன்ஷ்பெக்டர் பிச்சைமணி தலைமையிலான குழுவினர் விசாரனை செய்ததில் மேற்படி வழப்பறி குற்றத்தில் ஈடுபட்டது பெரம்பலூர் சங்குப்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்த, செந்தில்குமார் மகன் சாகுல்குமார் (21), வடக்குமாதவி சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த மகேஷ்வரன் மன் மகேந்திரன் (25),
அனுக்கூர் குடிக்காடு அம்பேத்கர் நகரை சேர்ந்த தங்கபிரகாசம் மகன் கலையரசன் (18) என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மூவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறைக்காவலுக்கு அனுப்பி வைத்தனர்.