Perambalur: 7 couples were married on behalf of the government; Kaliyaperumal, the chairman of the board of trustees, conducted the marriage on behalf of the Hindu Religious and Charitable Institutions Department!

பெரம்பலூர் அருகே உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 7 ஜோடிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையின் பெரமபலூர் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் ஆ.கலியபெருமாள், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன் ஆகியோர் திருமணத்தை நடத்தி வைத்தனர்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிடப்பட்ட 2024 2025ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற அறிவிப்பின்படியும், பொருளாதாரத்தில் பின்தங்கிய இணையர்களுக்கு திருக்கோயில்கள் சார்பாக ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 35 ஜோடிகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 700 ஜோடிகளுக்கு திருக்கோயில் சார்பில் ஒரு ஜோடிக்கு 4 கிராம் தங்க தாலி உட்பட ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிலான சீர்வரிசைகள் பொருட்கள் வழங்கி இலவசமாக திருமணம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து திருச்சி இணை ஆணையர் மண்டலத்தில் முதல் கட்டமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 21ஆம் தேதி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயிலில் 29 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக இன்று சிறுவாச்சூர் திருமணம் நடத்தி வைக்கபட்டது.

மணமக்களுக்கு தாலி, மெட்டி, புடவை, வேட்டி, கட்டில், பீரோ, மெத்தை, கோரைப்பாய், தலையனை, மிக்ஸி, எவர்சில்வர் தட்டு, டம்ளர், குடம், கரண்டி உள்ளிட்ட 60 வகையான சீர்வரிசை பொருட்கள் ஒவ்வொரு ஜோடிக்கும் வழங்கப்பட்டது. திருமணத்திற்கு வருகை புரிந்த மணமகன் மற்றும் மணமகள் அவர்களது உறவினர்களுக்கான இரவு, காலை, மதியம் விருந்து வழங்கப்பட்டது. .

பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், இந்து சமய அறநிலைத்துறை பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மணமகன் மணமகள் குடும்பத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!