Perambalur: 9 pounds of jewelry stolen after breaking the lock of a house! Police investigating!
பெரம்பலூர் மேற்கு அபிராமபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியதர்ஷினி (35). அவரது பெற்றோர்கள், தம்பி உள்பட குடும்பத்துடன் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் பிரியதர்ஷினியின் தம்பி குரூப் 4 தேர்வாகி உள்ளதால் கவுன்சிலிங்கிற்காக நேற்று முன்தினம் சென்னை சென்றுள்ளார். நேற்றிரவு திரும்பி வந்து வீட்டை பார்த்தபோது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த 9 பவுன் நகையை கொள்ளையர்கள் எடுத்து சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார், சம்பவ இடத்திற்கு தடய அறிவியல் நிபுணர்களுடன் விரைந்து சென்று, கொள்ளையர்கள் விட்டு சென்ற தடயங்களை வைத்து அவர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.