Perambalur: A biker died after a car ran over a man who fell onto the road after hitting a barrier!

பெரம்பலூர் அருகே பைக்கில் சென்ற வாலிபர் தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளாகி சாலை விழுந்தவர் மீது, பின்னால் வந்த கார் ஏறியதால் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம், தொழுதூர் அருகே உள்ள எழுத்தூரை சேர்ந்த பெருமாள் மகன் மலையராஜா (33). இவர் இன்று அதிகாலை சுமார் 1.15 மணி அளவில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, பெரம்பலூர் அருகே உள்ள மங்கலமேடு மின்வாரிய அலுவலகம் முன்பு வந்த போது தடுப்பு கட்டையில் மோதி சாலையில் கீழே விழுந்துள்ளார். அப்போது, வேகமாக வந்த கார் ஒன்று மலையராஜா மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தர். இது குறித்து தகவல் அறிந்த மங்கலமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி , உடற்கூறு ஆய்விற்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் அருகே உள்ள குலசேகரன் புதூரை சேர்ந்த கண்ணன் மகன் சுபின் (22) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!