Perambalur: A consultative meeting regarding preparedness work to combat the heat wave was held under the chairmanship of the Collector!

கோடைகாலம் தொடங்கிவிட்டதால் வெப்ப அலை மேலாண்மை குறித்து மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் கிரேஸ் பச்சாவ், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

கோடை காலம் தொடங்கி விட்டதால் வெப்ப அலை அதிகமாக உள்ளது. கோடைகாலத்தில் குழந்தைகள், மாணவ மாணவிகள், முதியர்வர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை தெளிவாக விளக்கிடும் வகையில், மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், சந்தைகள், திரையரங்குகள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைப்பதோடு, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கிட வேண்டும். போதுமான அளவில் குடிநீர், ஓ.ஆர்.எஸ். கரைசல்கள் ஆகியவற்றை வழங்கிடவேண்டும். 

அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு போதிய அளவில் குடிநீர் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அவ்வப்போது குடிநீர் வழங்கிடவும், தொழிற்சாலைகளில் வெப்பநிலை மிகுதியாக இருக்கும் பகுதிகளில் சுழற்சி முறையில் பணியாளர்களை நியமிக்கலாம். கால்நடைகளுக்கும் போதிய அளவில் குடிநீர் கிடைப்பதை உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறையினர் உறுதி செய்ய வேண்டும்.

வனப்பகுதிகளில் விலங்குகளுக்கும் குடிப்பதற்கு நீர் வழங்கிட ஏதுவாக அங்காங்கே தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். குடிநீருக்காக வனத்தை விட்டு விலங்குகள்வெளியில் வரும் நிலை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வனப்பகுதிகளில் உள்ள காய்ந்த இலைகள், புதர்களை அப்புறப்படுத்த வேண்டும். வெப்ப அலை குறித்து பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களும், பேருந்து நிலையம், மார்க்கெட், சந்திப்புகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் போன்ற பொது இடங்களில் போதிய குடிநீர் வசதி, ஓய்வுக்கான தங்குமிடங்கள், அவசர மருத்துவ வசதிகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பிற களப்பணியாளர்கள் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதை உறுதி செய்தல் வேண்டும். வெப்ப அலை மேலாண்மை வழிகாட்டுதல்களைப் பின்பற்ற ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்.

பொதுமக்கள் மதியம் 12 மணி மதல் 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். தாகம் இல்லாவிட்டாலும் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். இலகுரக,வெளிர்நிற, தளர்வான மற்றும் நுண்துகள்கள் கொண்ட பருத்தி ஆடைகளை அணியவும்,வெயிலில் வெளியே செல்லும்போது பாதுகாப்பு கண்ணாடிகள் குடை, தொப்பி எடுத்துச்சொல்ல வேண்டும், என தெரிவிக்கப்பட்டது,

இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) கே.மாரிமுத்து, மாவட்ட சுகாதார அலுவலர் எம்.கீதா, அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளாச்சி அலுவலர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!