Perambalur: A female farmer fainted in shock after seeing a thunderbolt fall nearby!

பெரம்பலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று மதியம் 2 மணிக்கு பிறகு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கணவாய் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த சுந்தரராஜ் மனைவி ஆரியமாலை (70) என்பவர் தனக்கு சொந்தமான வயலில் மழையிலும் 3 பெண்களுடன் வேலை பார்த்து கொண்டிருந்தார். சுமாராக மாலை 3.15 மணி அளவில் அவர் அருகே இடி விழுந்தது. இதனை கண்ட அதிர்ச்சியில் மயக்கமடைந்தார். உடன் வேலைபார்த்தவர்கள் ஆரியமாலையை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். தற்போது நல்ல நிலையில் உள்ளார். சற்று தள்ளி இருந்ததால் ஆரியமாலை இடிதாக்குதலில் இன்று அதிர்ஷ்ட்டவசமாக உயிர்தப்பினர். இச்சம்பவம் இன்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.










kaalaimalar2@gmail.com |
9003770497