Perambalur: A man who took a loan at high interest and invested in a fraudulent company committed suicide because he could not repay the loan! Pity!!

பெரம்பபலூர் மாவட்டம், கொளக்காநத்தம் அருகே உள்ள அனைப்பாடி நடுத்தெருவை சேர்ந்த கந்தசாமி மகன் ஆனஸ்ட் ஸ்டாலின் (40). விவசாயம் செய்து வந்த இவர், கடந்த 2016 ஆண்டு, பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் இயங்கி வந்த ஸ்காட்ச் நிறுவனத்தில், அதிக லாபம் கிடைக்கும் என்ற ஆசையால் உறவினர், நண்பர்களிடம் கோடிக்கணக்கில் பணம் அதிக வட்டிக்கு ( 100க்கு மாதம் ஒன்றுக்கு 5 வட்டி) பணம் வாங்கி முதலீடு செய்துள்ளார். பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் குடியிருந்து வந்தார்.

ஸ்காட்ச் நிறுவனம் மூடப்பட்டதால், பணம் மீண்டும் திருப்பி வராமல் இருந்ததால் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று காலை அனைப்பாடி வந்துள்ளார், இரவு அம்மா அப்பாவுடன் உணவு சாப்பிட்டுவிட்டு வீட்டின் முதல் தளத்தில் உள்ள படுக்கை அறைக்கு தூங்க சென்றுள்ளார். ஆனஸ்ட் ஸ்டாலினின் அம்மா குகப்பிரியா இன்று காலை 7 மணிக்கு டீ கொடுக்க மேலே சென்று பார்த்த போது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் கயிற்றால் தூக்கு மாட்டி இறந்த நிலையில் தொங்கி கொண்டு இருந்துள்ளார். இதை பார்த்து அவர் சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் கூடி அவரை இறக்கி உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில், ஆனஸ்ட் ஸ்டாலினுக்கு வேப்பந்தட்டை அருகே உள்ள பாலையூரை அவரது நெருங்கிய உறவினர் ஒருவர் ரூ.70 லட்சம் கொடுத்ததாகவும், அதில் சுமார் 58 லட்சம் செலுத்தியதாகவும், மீதி பணத்தை கேட்டு அவர் தகாத வார்த்தைகளால், போனில் திட்டியதால், அவமானம் தாங்க முடியாத அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
என இறந்தவரின் அண்ணன் பாலமுருகன் போலீசார் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

ஸ்காட்ச் என்ற நிறுவனத்தில் அதிக லாபம் கிடைக்கும் என முதலீடு செய்த பலர் இன்று பலர் சொல்லாத முடியாத துயரங்களை அனுப்பி வருகின்றனர். பலர், சொந்த வீடுகள், கட்டிடங்களை விற்றும் கடனை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!