Perambalur: A. Raja MP holds consultative meeting with vote-counting agents and functionaries.

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், மாவட்ட திமுக அலுவலகத்தில், மாவட்ட பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில் நடந்தது. இதில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் ஆதவ் தனியார் பள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. வருகிற மே. 4 அன்று காலை வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. வாக்கு எண்ணிக்கை தினத்தன்று, வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும், கடைசி சுற்று முடியும் வரையில் ஒவ்வொரு வாக்கையும் கண்காணிக்க வேண்டும் என ஆலோசனைகளை வழங்கினார். மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், வேட்பாளர் டாக்டர் எஸ்.டி. ஜெயலெட்சுமி, தொகுதி பார்வையாளர் தங்க.சித்தார்த்தன் மற்றும் வழக்கறிஞர்கள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!