Perambalur: A resolution was passed at the VCK meeting to permanently shut down Phoenix Kothari company, which is exploiting water resources and polluting groundwater!

பெரம்பலூர் மாவட்டம், சர்க்கரை ஆலை எறையூரில், விசிகவின் வேர்களைத் (மக்களை) தேடி பயணம் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடந்தது. புதிதாக கிளைச் செயலாளராக சிலம்பரசன் உள்ளிட்ட முகாம் மற்றும் மகளிர் விடுதலை இயக்கத்தின் பொறுப்பாளர்கள் முன்னிலையில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். முன்னாள் மண்டல செயலாளர் ரா.கிட்டு,மண்டல செயலாளர் ரா.ஸ்டாலின், இ.பொ.வி.இ மாநில துணைச் செயலாளர் அண்ணாதுரை, தொண்டர் அணி மாநில துணைச் செயலாளர் கராத்தே பெரியசாமி, வேப்பந்தட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் இடி முழக்கம், மு.மா.க மாவட்ட அமைப்பாளர் அய்யம்பெருமாள் , இராமர், சித்திக், சரண்ராஜ், அம்பேத் கோகுல் மற்றும் எறையூர் முகாம் பொறுப்பாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், கிளை பொருளாளர் திருமூர்த்தி, இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை கிளை செயலாளர் பெ. அறிவழகன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை பொருளாளர் ஜெயபால், மகளிர் விடுதலை இயக்கம் கிளை செயலாளர் அ. சந்தோஷம், மகளிர் விடுதலை இயக்கம் பொருளாளர் தி. கஸ்தூரி மற்றும் எறையூர் கிராமத்தை சேர்ந்த மனோகரன், மாரிமுத்து, சந்தானம், சக்திபாலன், பிச்சைப்பிள்ளை, பிரபு, மோகன்ராஜ், நீதிபூங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்
கூட்டத்தில், எறையூர் ஊராட்சிக்கு உட்பட்ட காலனி பகுதியில் 24 மணி நேரமும் இயங்கும் நூலகம், அங்கன்வாடி மற்றும் கால்நடை மருத்துவமனை கட்டித்தர வேண்டும், எறையூரில் பொங்கல் விளையாட்டு நிகழ்ச்சியின் போது இளைஞர்களை இழிவுபடுத்தியும், மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்ட மங்கலமேடு காவல் ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைக்கவும்,
ஐஓபி எறையூர் உள்பட அனைத்து வங்கி கிளைகளிலும், கல்விக்கடன் வழங்கிய அனைத்து வங்கிகளிலும், கல்விக் கடன் பெற்ற மாணவர்களிடமிருந்து கந்து வட்டி கும்பல் போல அடாவடி வசூல் செய்வதை கண்டிப்பதுடன், மத்திய அரசு கல்விக்கடனை நிபந்தனையற்ற தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும்,
மயானத்திற்கு சொந்தமாக உள்ள நில ஆக்கிரமிப்புகளை அகற்றி, அங்கு சுற்றுச்சுவர் அமைத்து உயர் மின் கோபுரம் அமைத்துத் தரவேண்டும் எனவும், சின்னாறு பகுதியில் அமைந்துள்ள உடற்பயிற்சி கூடம் செயல்படாமல் திறந்தவெளி மதுபான கூடமாக இருந்து வருகிறது. அதனை சீர்படுத்தி பாதுகாப்புடன் தினமும் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், குடி தண்ணீர் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே வழங்கப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளில் வடிகால் வாய்க்கால் சுத்தம் செய்யப்படுவதே இல்லை. தெரு விளக்குகள் பல இடங்களில் இல்லாமல் இருப்பதையும், இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டிப்பதுடன் நடவடிக்கை எடுக்கவும்,
எறையூரில் பிற சமுதாய மக்களின் ஆக்கிரமிப்பிலும், அவர்களின் சொந்த பெயரிலும் உள்ள பஞ்சமி நிலங்களை கையகப்படுத்தி நிலமற்ற தகுதி உள்ள தலித் மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும், எறையூரில் ஒரு சாரார் மட்டுமே வணிக நோக்குடன் கையகப்படுத்தி வைத்துள்ள கோவில் மானிய நிலங்களை ஊராட்சி நிர்வாகத்தின் கீழ் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும்,
எறையூர் ஊராட்சிக்கே தண்ணீர் பஞ்சம் வரும் அளவிற்கு நீராதாரத்தை சுரண்டி, நிலத்தடி நீர் மாசு ஏற்படுத்தும் பீனிக்ஸ் கோத்தாரி நிறுவனத்தை நிரந்தரமாக மூட வேண்டும் எனவும், இல்லையேல் மக்கள் போராட்டம் நடத்தி தக்க நடவடிக்கை எடுக்க வைக்க நேரிடும் எனவும், பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் எனவும், 10 ஆண்டுகளுக்கு மேலாக தினக்கூலி அடிப்படையில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு நிரந்தர அரசு பணி வழங்கிட வேண்டும் என பலதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.











kaalaimalar2@gmail.com |
9003770497