Perambalur: A special camp connecting household workers in welfare; Labor Assistant Commissioner Information!
தமிழ்நாடு வீட்டுப் பணியாளர்கள் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்களை அதிக அளவில் சேர்த்தல் குறித்து வீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்காக சிறப்பு முகாம் 02-04-2025 அன்று பெரம்பலூர், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இம்முகாமிற்கு வருகை தரும் உறுப்பினர்கள் தங்களின் அசல் ஆவணங்களை (குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வங்கி புத்தகம், வயதுக்கான சான்று மற்றும் புகைப்படம்) எடுத்து வந்து பதிவு செய்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது, பதிவு செய்வது முற்றிலும் இலவசம்.
தற்போது, தொழிலாளர்கள் நலனை கருத்தில் கொண்டு. பெரம்பலூர் மாவட்ட பெருந்திட்ட வளாகம், எம்.ஜி.ஆர். விளையாட்டு திடல் அருகில் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக வளாகம், பெரம்பலூர், தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாமில் நேரில் சமர்ப்பித்து பயனடையுமாறும், பெரம்பலூர், தொழிலாளர் உதவி ஆணையர் மு.பாஸ்கரன் (சமூக பாதுகாப்பு திட்டம்) விடுத்துள்ள அறிவிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.