Perambalur: A woman who boarded a bus changed and fell to her death while getting off! Public demands that the minister take action to show only the towns the bus is going to, instead of showing the town it came from on the bus route board!
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள வடகரையை சேர்ந்த குமார் மகள் குணவதி (18), இவர் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.சி.ஏ 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
இன்று குணவதி அவரது கேர்ள் பிரண்ட் அக்காவின் திருணம் பெரம்பலூர் அருகே உள்ள பாடாலூரில் நடந்தது. அதற்கு சென்று விட்டு தைப்பூசம் கொண்டாட சொந்த ஊருக்கு செல்ல பெரம்பலூர் புது பஸ் ஸ்டாண்டில் திருச்சி – கடலூர் செல்லும் பஸ் என நினைத்து, கடலூர் – திருச்சி செல்லும் பஸ்சில் வழித்தட பலகை திட்டக்குடி, பெண்ணாடம்…. என காட்டியதால் ஏறிவிட்டார். பஸ் கடலூர் மார்க்கத்தில் செல்லாமல் திருச்சி மார்க்கத்தில் சென்றது. பஸ் பாலக்கரை அருகே சென்ற போது, ஓடிக் கொண்டிருக்கும் பஸ்சில் இருந்து இறங்கியபோது தலையில் அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தார். (அரசு பேருந்து எண் – TN 32 N 4838) விருத்தாசலத்தை சேர்ந்த டிரைவர் பாலமுருகன், கண்டக்டர் குமாரசாமி பணியில் இருந்தனர். அங்கிருந்தவர்கள் உதவியுடன் அந்த பெண்ணை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு பணியில் இருந்த மருத்ததுவர்கள் அந்த பெண் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு, உடற்கூறு ஆய்வு நடத்தி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு விடுக்கும் கோரிக்கை:
உதரணமாக, தேனியில் இருந்து சென்னை செல்லும் பேருந்தை பெரம்பலூரில் பார்த்தால், கொடைரோடு, வத்தலக்குண்டு திருச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், விழுப்புரம் டிஜிட்டல் வழித்தட பலகையில் என ஓடிக் கொண்டே இருக்கிறது. இது எந்த ஊருக்கு செல்கிறது இடைப்பட்ட ஊருக்கு செல்லும் பயணிகளை பெரிய அளவில் குழப்புவதாக இருப்பதால், வந்த ஊர்களை வழித் தட பலகையில் காட்டாமல், செல்லும் ஊர்களை மட்டுமே காட்டும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்படுவது, பெண்களே, அதுவும் குழந்தைகளுடன் செல்லும் பெரும் சிரமம் அடைகின்றனர். எனவே, போக்குவரத்து துறை அமைச்சர் இதில் தனிக்கவனம் செலுத்தி பொதுமக்களின் சிரமத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.